‌சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நமீதா.. இணையத்தில் கலக்கும் போட்டோ ஷூட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 2000-களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நமீதா. தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், விஜய், அஜித் குமார், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நமிதா சினிமாவில் இருந்து விலகினார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததால் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டார்.

இதனிடையே பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது நமிதா மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனை உறுதி செய்யும் வகையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதன்படி போட்டோ சூட் நடத்திய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress namitha photoshoot video viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->