நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணம்.?! குடும்ப நண்பருடன் நடக்கவுள்ளதா.?! - Seithipunal
Seithipunal


நடிகை மீனா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை மீனா. ஒரு காலகட்டத்தில் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்களுடன் சேர்ந்து நடித்து வந்தார். 

கால்ஷீட் கூட கிடைக்காத அளவிற்கு படு பிசியான நடிகையாக மீனா இருந்து வந்தார். திருமணத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களை கையில் எடுத்து நடித்து வருகின்றார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினியுடன் சேர்ந்து அண்ணாத்த திரைப்படத்தில் மீனா நடித்திருந்தார். 

இத்தகைய நிலையில் மீனாவின் கணவர் வித்தியாசாகர் கடந்த ஜூன் மாதத்தில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது குழந்தை நைனிகாவும் ஒரு நடிகையாக தான் இருக்கிறார். குழந்தையுடன் தனிமையில் இருக்கும் மீனாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் வற்புறுத்தி வந்துள்ளனர். 

ஆனால் இதற்கு மீனா ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது .தொடர்ந்து பெற்றோர் வற்புறுத்திய காரணத்தால் சரி என்று அவர் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக குடும்ப நண்பராக இருக்கும் ஒருவரை தான் திருமணம் செய்து வைக்க மீனா வீட்டினர் திட்டமிட்டுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actress meena may marry second time


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->