ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்ற "நடிகை லதா"...! - Seithipunal
Seithipunal


பழம்பெரும் நடிகை லதாவிற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான லதா, எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலருடன் நடித்துள்ளார். இவர் 1973ஆம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் மூலம் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். தற்போது சீரியல்களில் நடித்துவருகிறார். 

இந்நிலையில், திரையுலகில் ஐம்பது ஆண்டு சாதனைகளை கவுரவிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரக அரசு லதாவிற்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகள் ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

ஏற்கனவே, நடிகர் கமல்ஹாசன், சரத்குமார், பார்த்திபன், விஜய்சேதுபதி, நாசர், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், நடிகை திரிஷா, மீனா, காஜல் அகர்வால், மீரா ஜாஸ்மின், பாவனா உள்ளிட்ட பலருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Lata gets golden visa of UAE


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->