சேரனுக்காக விவேக் செய்த காரியம்.. விளாசும் கவின் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சில நாட்கள் முன்பு கோலாகலமாக முடிவடைந்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சேரன் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக மீரா மிதுன் கூறி வருகிறார். மேலும், கவின் ஆதரவாளர்கள் சேரனை சமூக வலைதளங்களில் விமரிசித்து வருகின்றனர்.

கவினுக்கு என்னை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது என்று சேரன் பேட்டி அளித்தார். இதை பார்த்துவிட்டு தான் கவின் ஆர்மி அவரை வசை பாடி வருகின்றனர். கவின் உங்களைப் பற்றி எதுவும் தவறாக பேசவில்லை, அப்படி இருக்கும்போது போலியாக நடந்து கொண்ட நீங்கள் எப்படி கவினை பற்றி அப்படி பேசலாம் என்று கவண் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து சேரன், இனி கவின் லொஸ்லியா விவகாரத்தில் தலையிட போவதில்லை, என் விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என கூறினார்.

இந்நிலையில், நடிகர் விவேக் தற்போது சேரனுக்கு ஆதரவளிக்கும் வகையில், டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில் சேரன் சார்! நீங்கள் மிக சிறந்த சமுதாய நோக்கம் உள்ள தேசிய விருது பெற்ற படைப்பாளி. ஆகவே விஜய் சொல்வது போல் “ ignore negativity”. அஜீத் சொல்வது போல் “ let go”. நல்ல கருத்தினை பதிவிட்டு அமைதி, ஆனந்தமுடன் இருங்கள். Peace to all என பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த கவின் ஆதரவாளர்கள் கடுப்பாகி மீண்டும் சேரனை விளாசத் துவங்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vivek tweet about cheran


கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
Seithipunal