#சென்னை | நடிகர் விஷாலின் வீடு மீது தாக்குதல்! பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஷாலின் வீடு மீது நேற்று இரவு தாக்குதல் நடந்துள்ளது. சிவப்பு காரில் வந்த மர்ம கும்பல் விஷால் வீட்டின்மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக சிசிடிவி கட்சிகளுடன் அவரின் மேலாளர் புகார் அளித்துள்ளார்.

அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளரிடம், நடிகர் விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் கொடுத்துள்ள அந்த புகார் மனுவில், "சென்னை, அண்ணாநகரில் நடிகர் விஷால் அவர்கள் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

நேற்று (26-09-2022) இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடிகர் விஷால் அவர்களின் வீட்டை தாக்கினர். 

அதற்கான ஆதாரமாய் எங்களுடைய இல்லத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவையும் இதில் கொடுத்துள்ளோம். 

எனவே இந்த புகாரை ஏற்று விசாரணை மேற்கொண்டு எங்கள் இல்லத்தை தாக்கிய மர்ம நபர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த புகாரில் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vishal Attack Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->