லோகேஷ் கனகராஜின் அந்த படத்தில் கைக்கோர்க்கப்போகும் விக்ரம்.. இது செம்ம தகவலாச்சே.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வெளியான விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்றது. நெகட்டிவ் விமர்சனங்களே, எழாத வகையில் தான் படம் வெற்றி பெற்றுள்ளது. 

விக்ரம் திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி இதுவரை 430 கோடிகளை வசூல் செய்துள்ளது. விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சூர்யா அட்டகாசமாக 10 நிமிட காட்சியில் கலக்கி இருப்பார். இந்த நிலையில், இந்த கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விக்ரம் தானாம். 

ஆனால், இது வெறும் சின்ன கதாப்பாத்திரம் என்று இந்த வாய்ப்பை அவர் கழட்டி விட்டுள்ளாராம். கால்ஷீட் பிரச்சனையும் இருந்ததால் அவர் நடிக்க மறுத்த பின் தான் இந்த வாய்ப்பு சூர்யாவை தேடி போனதாம். இந்த கதாப்பாத்திரத்தின் தன்மை அறிந்து சூர்யா தட்டி தூக்கி விட்டாராம். 

இந்த நிலையில், விக்ரம் 2 படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ரீப்ளே செய்யப்போவது விக்ரம் தான் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, ரோலக்ஸ் கதா பாத்திரத்தின் முக்கியத்துவம் தெரியாமல் தவறு செய்துவிட்ட விக்ரம் அடுத்த படத்தில் அந்த தவறை செய்யக்கூடாது என மிகவும் கவனமாக இருக்கிறாராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vikram act in Vikram 2


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->