நடிகர் விஜயின் 'தி கோட்' படம் இன்று வெளியானது! யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சி பதிவு! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்று இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்துள்ள  'தி கோட்' திரைப்படம்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது, நடிகர் விஜய் உடன் இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் தந்தை மற்றும் மகன் என நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள நிலையில் இப்படத்தில் கேப்டன் விஜயகாந்தின் ஏஐ தோற்றத்தை படக்குழுவினர் பயன்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் இன்று உலகம் முழுவதும்'தி கோட்' திரைப்படம் படம் வெளியாகியது. இப்படத்தை ரசிகர்கள் தீபாவளி திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் முதல் காட்சி காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. நேற்று இரவு முதல் இருந்தே விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் மீதான என் அன்பை வெளிப்படுத்துவதற்கு தகுந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்களுக்கு நன்றி என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக, யுவன் சங்கர் ராஜா அவரது  எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. நடிகர் விஜய் மீதான என் அன்பை வெளிப்படுத்துவதற்கு தகுந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு மிக்க நன்றி. குறிப்பாக இயக்குனர் வெங்கட் பிரபு இல்லாமல் இது எதுவும் நடந்திருக்காது" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Vijays film The Goat released today Yuvan Shankar Raja elastic record


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->