சூர்யா தயாரிப்பில் நடிக்கும் சூரி - வெளியானது மரண அப்டேட்.!
actor soori work in surya production
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்த ‘விடுதலை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் ‘கருடன்’ படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் மட்டுமல்லாது ‘கொட்டுக்காளி’, ‘ஏழு கடல் ஏழு மலை’, ‘விடுதலை2’ உள்ளிட்ட படங்களை நடிகர் சூரி தனது கைவசம் வைத்துள்ளார். இதில் ‘கொட்டுக்காளி’ படத்தினை ‘கூழாங்கல்’ இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.

வெளியாகுவதற்கு முன்பே ‘கூழாங்கல்’ திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு நல்ல பாராட்டுகளைப் பெற்று இருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் படம் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் சூரி, மற்றுமொரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் புதிய படத்தை ’விலங்கு’ வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க, நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்கிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றுத் தெரிகிறது.
English Summary
actor soori work in surya production