சிவகார்த்திகேயனிடம் கேள்விக் கேட்க ஓர் அரிய வாய்ப்பு.! மிஸ் பன்னிடாதீங்க.!  - Seithipunal
Seithipunal


திரைத்துறையில் கடுமையான உழைப்புக்கும், வலிக்கும் உள்ளாகி வந்த நடிகரில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவா என்றும் சிவகார்த்தி என்றும் ரசிகர்களால் அழைக்கப்படும் சிவாவுக்கு விஜய் தொலைக்காட்சி கொடுத்த அங்கீகாரத்தால் இன்று தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகிவிட்டார்.

மெரினா, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் தொடங்கி இன்று டாக்டர் படம் வரை என பல படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், திரைப்பட தயாரிப்பாளராகவும் வளர்ந்துள்ளார். அவரது முதல் தயாரிப்பு படமான கனா பலரின் கவனத்தை பெற்று பெரும் பாராட்டுகளை அள்ளித்தந்தது. 

சமீபத்தில் இவரது நடிப்பில், டாக்டர் மற்றும் டான் உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.அடுத்ததாக, தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடிக்கின்றார். அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இந்தத் திரைப்படத்தின் பிரமோஷன்களில் பட குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இத்தகைய சூழலில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னிடம் என்ன வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள்." என்று ஒரு ஹேஷ்டேக் அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த ஹேஷ்டேகை பதிவிட்டு யார் கேள்வி எழுப்பினாலும் அதற்கு சிவகார்த்திகேயன் பதிலளிப்பார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor sivakarthikeyan ask Me anything challenge


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->