நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு..புதிய படத்தின் டீஸர் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சந்தானம் தனது விடா முயற்சியாலும், திறமையாலும் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. நாளுக்கு நாள் அவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

இத்தகைய நிலையில் சமீபத்தில் சீனிவாசராவ் இயக்கத்தில் சபாபதி திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடித்திருந்தார். வழக்கம்போல நகைச்சுவை காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது. 

இந்த நிலையில் இன்று நடிகர் சந்தானத்தின் 42வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் புதிதாக நடித்துள்ள 'ஏஜன்ட் கண்ணாயிரம்' திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Santhanam Agent Kannayiram movie teaser release


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->