தயாரிப்பாளராக அறிமுகமாகும் நடிகை ரஞ்சனா நாச்சியார்.!! - Seithipunal
Seithipunal


தயாரிப்பாளராக அறிமுகமாகும் நடிகை ரஞ்சனா நாச்சியார்.!!

'துப்பறிவாளன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரஞ்சனா நாச்சியார். இவர் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' மற்றும் அருள்நிதி நடித்த 'டைரி' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை ரஞ்சனா நாச்சியார் நடிப்பை தொடர்ந்து புதிதாக தயாரிப்புத் துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

தற்போது ஸ்டார் குரு ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள ரஞ்சனா நாச்சியார் ஒரே நேரத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கவுள்ளார். இதில் ஒரு படத்தை 'பில்லா பாண்டி', 'குலசாமி', 'கிளாஸ்மேட்ஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சரவண சக்தி இயக்குகிறார். மற்றொரு படத்தை விஜய் டிவி புகழ் நடிகரான அறிமுக இயக்குநர் சங்கர பாண்டியன் இயக்குகிறார்.

இது குறித்து நடிகை ரஞ்சனா தெரிவித்ததாவது, “மிகப்பெரிய குடும்பத்திலிருந்து சினிமாவிற்கு வந்தபோதும் கூட சினிமாவில் பெரிய அளவில் உன்னால் ஜெயிக்க முடியாது என்று தான் பலரும் கூறினார்கள். ஆனால் ஒரு நடிகையாக சினிமாத்துறையில் நல்ல இடத்தைப் பிடித்துள்ள நான் அடுத்ததாக படத்தை இயக்கவும் முடிவெடுத்துள்ளேன். 

அதில் முதல்கட்டமாக படங்களைத் தயாரித்து அதுகுறித்த நுணுக்கங்களை முழுவதும் அறிந்து கொள்வதற்காகவே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களைத் தயாரிக்க முடிவு செய்தேன். பெரும்பாலும் ஆண்களே ஒரு படத்தை தயாரித்து முடித்த பின்னர் தான் அடுத்த படத்தை ஆரம்பிப்பார்கள்.

ஆனால் பெண்களாலும் வெற்றிகரமாக சாதிக்க முடியும் என்பதற்காகவே நான் ஒரே நேரத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளேன். இந்த இரண்டு படங்களிலும் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor ranjana nachiyar debuting producer


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->