மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கேஜிஎப் நடிகர்.! - Seithipunal
Seithipunal


’கே.ஜி.எஃப்’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். அதிலும் இவர் நடித்திருந்த ராக்கி பாய் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறு ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆஃபிஸிலும் பட்டையை கிளப்பியது. 

இந்த நிலையில், நடிகர் யாஷ் வட கன்னட மாவட்டத்தில் உள்ள சித்ரபூர் மாதா கோயிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அங்கே இருக்கும் பெட்டிக்கடை ஒன்றில் உள்ள குச்சி மிட்டாய் வேண்டும் என்று யாஷின் மனைவி ராதிகா பண்டித் கேட்டிருக்கிறார். 

 

உடனே யாஷும் மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அந்தக் கடைக்குச் சென்று குச்சி மிட்டாயை வாங்கிக் கொடுத்துள்ளார். மனைவி ஆசையை நிறைவேற்ற அங்கு வந்த யாஷ்ஷைப் பார்த்ததும் ரசிகர்கள் ஒன்று திரண்டு அவருடன் ஆசையாகப் புகைப்படங்களும் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kgf buy kuchi mittai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->