அமீர் இயக்கும் புதிய திரைப்படம்: வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் அமீர் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன் போன்ற திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர். இவர் திரைப்படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். 

தற்போது அமீர் இயக்கத்தில் ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இறைவன் மிகப் பெரியவன்'. 

இந்த திரைப்படத்திற்கான கதையை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதியுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு ராம்ஜி ஒலி பதிவு செய்கிறார். 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. வித்தியாசமாக உள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

மேலும் இந்த போஸ்டரில் 'இறைவன் மிகப்பெரியவன்' திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aamir New Movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->