கேப்ரில்லாவுடன் காதலா.? ஆஜித் கூறிய பதிலை கேட்டு அதிர்ந்து போன நெறியாளர்.!  - Seithipunal
Seithipunal


கேப்ரில்லா சார்ல்ட்டன் தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான இவர், ஜோடி நம்பர் ஒன் பார்ட் 6-இல் வெற்றி பெற்றார்.

9 வயதிலேயே திரைத்துறைக்கு வந்தவர், விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் மூலம் பிரபல தன்மையைப் பெற்ற கேப்ரில்லா விஜய் டிவியின் ஒன்பதாம் வகுப்பு c' பிரிவு சீரியலில் நடித்தார். தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக கடந்த 2012ம் ஆண்டில் நடித்திருப்பார்.

அதனைத் தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் மற்றும் அப்பா போன்ற திரைப்படங்களில் கேப்ரில்லா நடித்தார். கடந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற அவர், தற்போது ஈரமான ரோஜாவே சிசன் 2 சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். 

இந்த நிலையில், தற்போது கேப்ரில்லா ஆஜித்துடன் இணைந்து அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். இதை கண்ட பலரும் இருவரும் காதலிப்பதாக தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் சமீபத்தில் இது குறித்து சமீபத்திய இன்டர்வியூ ஒன்றில் ஆஜித்திடம், "இருவரும் காதலிக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பிய போது, "நாங்கள் இருவரும் அது போன்ற ஒரு எண்ணத்தில் பழகவில்லை. அண்ணன் தங்கை போல தான் பழகி வருகிறோம்." என்று தெரிவித்துள்ளார். இதை கேட்ட நெறியாளர் அதிர்ந்து போய் நம்பமுடியவில்லை என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aajith about gabrialla in interview 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->