90ஸ் கிட்ஸ் ரெடியா...நாயகன் மீண்டும் வரார்.. 19 வருடங்களுக்கு பிறகு வரும் சக்திமான்! - Seithipunal
Seithipunal


90களின் பொற்காலம் இன்னும் பெரும்பாலானவர்களின் நினைவுகளில் பொங்கி நிற்கிறது. அந்நாளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளும் சீரியல்களும் இன்றும் மறக்கமுடியாதவை. குறிப்பாக, குழந்தைகளின் முதல் இந்திய சூப்பர்ஹீரோவாக கருதப்பட்ட சக்திமான்  சீரியல் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு சுவையான இடத்தை பிடித்துள்ளது.

அந்த காலகட்டத்தில் சக்திமான் பாத்திரத்தில் நடித்த முகேஷ் கண்ணா, சமீபத்தில், சக்திமான் மீண்டும் திரும்ப வரப்போகிறார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சீரியல் தொடங்கிய காலத்தில் பிள்ளைகள் சக்திமான் ஸ்டிக்கர்கள் வாங்கி வீடுகளை அலங்கரித்த காலத்தை முகேஷ் கண்ணா நினைவுகூர்ந்து கூறியுள்ளார். அப்பொழுது, குழந்தைகள் சக்திமான் போன்று மேஜிக் செய்ய முயன்று விபத்தில் சிக்கும் சம்பவங்களும் உண்டு. 

இப்போது மீண்டும் சக்திமான் புதிய தலைமுறையினரிடமும் சென்று சேர வேண்டும் என்ற விருப்பத்துடன், அவர் ஒரு புதிய தொடர் வடிவில் திரும்ப வருகிறார். சக்திமான் மூன்று சீசன்களாக ஒரு வெப் தொடராக வெளிவரும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. 

சக்திமானின் வருகையை 90ஸ் கிட்ஸ் கொண்டாடும் நாளை நம்பிக்கையுடன் எதிர்நோக்கலாம், மேலும் நம்முடைய பேவரைட் இந்திய சூப்பர்ஹீரோவின் கதை இனி புதிய தலைமுறையினரையும் கவரும் வகையில் திரும்ப வர உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

90s Kids Ready The hero is back Shaktiman after 19 years


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->