16 வயதினிலே பட தயாரிப்பாளர் மரணம்.. இயக்குனர் பாரதிராஜா இரங்கல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் இந்திய சினிமாவையே புரட்டிப் போட்டது. அதற்கு காரணம் இயக்குனர் பாரதிராஜா முதன்முறையாக கிராமத்து சாயலை அவ்வளவு அழகாக காட்டியிருந்தார்.

இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான நடிகர், ரஜினி கமல் மற்றும் நடிகை ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்திருந்தார். தயாரிப்பாளர் ராஜ்கண்ணு தமிழில் கிழக்கே போகும் ரயில், கன்னி பருவத்திலேயே, மகாநதி உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு இன்று காலமானார். தற்போது அவரது மறைவுக்கு துணைப் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் தயாரிப்பாளர் ராஜ் கண்ணும் அறிவுக்கு இயக்குனர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இருங்கள் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ""16 வயதினிலே"திரைப்படத்தின்
வாயிலாக  என்னை இயக்குனராக
அறிமுகம் செய்து, என் வாழ்வில்
ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு,பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்." என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 vayathinile producer SA Rajkannu passed away


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->