14 வயது சிறுமியை திருமணம் செய்த எம்.பி.! புகாரளித்த மகளிர் அமைப்பு.!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான மவுலானா சலாஹுதீன் அய்யூபி என்பவர் 14 வயது சிறுமியை திருமணம் செய்து இருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பயங்கர எதிர்ப்பு வலுத்து வருகிறது. 

இது குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பலுசிஸ்தான் மாகாணத்தில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மவுலானா 14 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து இருப்பதாக மகளிர் அமைப்பு புகார் அளித்துள்ளது. 

எனவே இந்த விவகாரம் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது. குறிப்பிடப்பட்ட சிறுமி பள்ளியில் படித்து வருகிறார். இதனால், அவர் திருமணம் செய்து கொள்ளும் வயதை எட்டவில்லை. இந்த திருமணம் செல்லாது என்று மகளிர் அமைப்புகள் குரல் கொடுக்க துவங்கியிருக்கிறது. 

இத்தகைய சூழலில் எம்பியின் இந்த திருமணம் குறித்த காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்பி மவுலியாவின் தரப்பிலிருந்து எந்தவிதமான விளக்கமும் கொடுக்கப்படவில்லை. பாகிஸ்தானின் சட்டப்படி 16 வயதிற்கு குறைவான பெண்களை திருமணம் செய்வது குற்றம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 years girl married to mp in pakisthan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal