தங்கத்தின் விலையை முடிவு செய்வது யார்? தங்க மார்கெட்டின் குடுமியே "இவங்க" கிட்ட தான்! ஆனந்த் சீனிவாசன்! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை இடைவேளையில்லாமல் உயர்ந்து வந்தது. இப்போது தான் ஓரளவுக்கு நிலையாக இருந்தாலும், “இனி தங்கம் விலை குறையுமா, இல்லையா மேலும் உயரும்?” என்ற கேள்வி பொதுமக்களிடையே தொடர்கிறது.

இந்த நிலையில் தங்கம் விலை ஏற்றத்திற்கான உண்மையான காரணத்தைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது:“தங்கம் விலை சாதாரண மக்கள் வாங்குவதால் பெரிய அளவில் உயராது. உலக நாடுகள் — குறிப்பாக சீனா, துருக்கி போன்றவை — தங்கத்தை பெரிய அளவில் வாங்கி குவிப்பதால்தான் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது,” என்று கூறினார்.

அவர் தனது யூடியூப் சேனலில் மேலும் கூறுகையில்,“1991 முதல் 2016 வரை தங்கம் விலையில் பெரிய மாற்றமே இல்லை. 1991ல் ஒரு அவுன்ஸ் தங்கம் 200 டாலர் தான். 2015ல் தான் அது 1000 டாலர் ஆனது. அதாவது 24 ஆண்டுகளில் வெறும் 5 மடங்கு உயர்ந்தது.

2008ல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும் தங்கம் தற்காலிகமாக 700 டாலரைத் தொட்டது. பின்னர் குறைந்தது. ஆனால் இப்போது சீனாவின் பொருளாதார வளர்ச்சியும், அமெரிக்காவின் பலவீனமும் சேர்ந்தது தங்க விலையை உயர்த்துகிறது.”

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான அரசியல், வர்த்தக மோதல்கள் தங்கத்தின் விலையை நேரடியாக பாதிக்கின்றன என்றும்,“முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பெடரல் வங்கியுடன் மோதல் போக்கை எடுத்துக் கொண்டிருப்பதால் தங்க விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது,”என்றும் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.

அவர் மேலும் விளக்குகையில்,“உக்ரைன் போருக்குப் பிறகு உலக நாடுகள் தங்களது நாணய இருப்புகளை தங்கமாக மாற்றத் தொடங்கியுள்ளன. அதுதான் தங்க விலை தாறுமாறாக உயர்வதற்குக் காரணம்.உலக நாடுகள் தங்கம் வாங்குவதை நிறுத்தினால், விலை மீண்டும் 1800 டாலர் அளவுக்கு குறையலாம்,”என்றார்.

தற்போது தங்கம் விலை நிலையாக இருந்தாலும், உலக அரசியல் சூழ்நிலை எந்த நேரத்திலும் புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.“தங்கம் விலை குறைய வேண்டுமானால் உலக பொருளாதாரம் அமைதி காண வேண்டும். ஆனால் தற்போது அந்த வாய்ப்பு மிகவும் குறைவு,”என்றும் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who decides the price of gold The gold market is owned by these people Anand Srinivasan


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->