ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 100 கோடி ரூபாய் புஸ்.! மார்க் மாமாவின் சொத்து 52 ஆயிரம் கோடி காலி.! - Seithipunal
Seithipunal


வளர்ந்து வரும் இந்த நவீன உலகத்தில் சமூக வலைதளம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாமையாக மாறிவிட்டது, குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பள்ளி மாணவிகள் நயவஞ்சகர்களின் காதல் வலையில் விழுந்து, தங்களது வாழ்க்கையை தொலைத்து வரும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நேற்று சுமார் 6 மணி நேரம் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவை முழுவதும் முடக்கப்பட்டது. டிவிட்டர் மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. டிவிட்டர் பக்கத்தில், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்கள் தங்களது புலம்பலை கொட்டித் தீர்த்தனர். 

இதற்கிடையே ஃபேஸ்புக் தடங்கலுக்கு அதன் நிறுவனர் மார்க் தனது மன்னிப்பை கேட்டுக் கொண்டுள்ளார். ஏதோ ஒரு தவறு நடந்துள்ளதாகவும், விரைந்து அந்த தவறை சரி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது பயனாளர்களிடம் இந்த தடங்களுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுமார் 6 மணி நேரம் பேஸ்புக் குழுமம் முடங்கியதால், அதன் தலைவர் மார்க் அவர்களின்  சொத்து மதிப்பில் சுமார் 600 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், மார்க்-கின் சொத்து மதிப்பில் 52 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு, உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முடக்கம் செய்யப்பட்ட பேஸ்புக்கின் ஒவ்வொருமணி நேரத்துக்கும் பங்குச்சந்தையில் 100 கோடி ரூபாய் வீதம் 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mark property value loss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->