புதிய சூப்பர்பைக் அறிமுகம் செய்த ஹோண்டா-விலை எவ்வளவு தெரியுமா?
Honda has launched a new superbike do you know how much it costs
இந்திய பைக் பிரியர்களுக்கு ஹோண்டா நிறுவனத்திலிருந்து ஒரு அதிரடி செய்தி வந்திருக்கிறது. வேராண்டாவின் முதன்மை ஸ்போர்ட் பைக், ஹோண்டா CBR1000RR-R இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகமாகியுள்ளது.
இந்த பைக் தற்போது டாப் எண்ட் வேரியண்ட்-ல் மட்டுமே கிடைக்கிறது. விலை — எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் ₹28.99 லட்சம். இது முந்தைய மாடலை விட சுமார் ₹2.23 லட்சம் அதிகம். விலை உயர்ந்தாலும், பைக்கில் சேர்க்கப்பட்டுள்ள புதுப்பிப்புகள் அதனை இன்னும் பிரீமியமாக்குகின்றன.
புதிய CBR1000RR-R பைக்கின் வடிவமைப்பைப் பார்த்தால், முந்தைய மாடலைப் போலவே தெரிந்தாலும், பாடிவொர்க் மற்றும் ஹார்ட்வேர் சில திருத்தங்களுடன் வந்துள்ளது. முக்கியமாக, பைக்கின் ஃபேரிங்கில் புதிய ஏரோடைனமிக் விங்லெட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பைக் அதிவேகத்தில் செல்லும் போது, டவுன்ஃபோர்ஸ் அதிகரித்து, சவாரி இன்னும் ஸ்டேபிளாக இருக்கும்.
செயல்திறன் பக்கம் பார்ப்போம். புதிய CBR1000RR-R இல் 999cc இன்லைன் 4-சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 14,000 RPM-இல் 214.5 ஹார்ஸ் பவர்வும், 12,000 RPM-இல் 113Nm டார்க்-உம் உருவாக்குகிறது. இந்த பவர், டார்க் புள்ளிகள் முந்தைய மாடலுக்கு இணையாகவே இருந்தாலும், அதனை சப்போர்ட் செய்யும் தொழில்நுட்ப மேம்பாடுகள் பைக்கின் ரைடிங் அனுபவத்தை இன்னும் அதிரடியாக்குகின்றன.
இதனுடன், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், இரு திசையிலும் செயல்படும் குயிக்ஷிஃப்டர், மேலும் பைக் ரசிகர்கள் மிகவும் விரும்பும் அக்ரபோவிக் டைட்டானியம் எக்சாஸ்ட் இணைக்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஷன் அமைப்பில், முன்புறத்தில் Ohlins USD ஃபோர்க்கள் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது. இரண்டும் மின்னணுவழி (electronic) முறையில் சரிசெய்யக்கூடியவை என்பதால், சாலையின் தன்மைக்கு ஏற்ப பைக்கை எளிதாக அட்ட்ஜஸ்ட் செய்யலாம்.
பிரேக்கிங்கில், முன்புறத்தில் டூயல் 330mm டிஸ்க்கள் மற்றும் பின்புறத்தில் 220mm ஒற்றை டிஸ்க் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பைக் அதிவேகத்தில் இருந்தாலும், பிரேக்கிங் மிகுந்த நம்பிக்கையை தரும்.
அடுத்து எலெக்ட்ரானிக்ஸ்: ஹோண்டா CBR1000RR-R பைக்கில் 5 லெவல் பவர் மோட்கள், 9 லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல், 3 லெவல் எஞ்சின் பிரேக் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல் மற்றும் ABS ஆகிய அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. இவை ரைடருக்கு முழுமையான கட்டுப்பாட்டையும், பாதுகாப்பையும் வழங்குகின்றன.
மொத்தத்தில் பார்க்கும்போது, ஹோண்டாவின் புதிய CBR1000RR-R, இந்தியாவில் ஸ்போர்ட் பைக் பிரியர்களுக்கு மீண்டும் ஒரு கனவாக வந்து சேர்ந்திருக்கிறது. விலை உயர்ந்தாலும், அதில் தரப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள், அதிரடி செயல்திறன் மற்றும் ஹோண்டாவின் நம்பகத்தன்மை – இந்த பைக்கை சூப்பர் ஸ்போர்ட் செக்மென்ட்-இல் ஒரு சிறந்த விருப்பமாக மாற்றுகின்றன.
English Summary
Honda has launched a new superbike do you know how much it costs