ஹீரோ மோட்டோகார்ப் புதிய Xoom 160 மாடல்..பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம்!
Hero MotoCorp launches new Xoom 160 model with various features
வரிரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்தியாவில் தனது புதிய X 160 அட்வென்ச்சர் மேக்சி ஸ்கூட்டர் விநியோகங்களை விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
முன்னதாக, ஹீரோ நிறுவனம் கடந்த ஜூலை மாத வாக்கில் Xm 160 மாடலுக்கான முன்பதிவுகளை தொடங்கியிருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வரிரோ Xoom 160 அறிமுகப்படுத்தப்பட்டு, ரூ.1.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டது. ஆனால், விநியோகம் உடனடியாக தொடங்கப்பட இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.
அட்வென்ச்சர் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மேக்சி-ஸ்கூட்டர், 156சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உடன் வருகிறது. இது 14hp பவர் மற்றும் 14Nm டார்க் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மோட்டார் CVT ஆட்டோமேடிக் யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒரே அட்வென்ச்சர் மேக்சி-ஸ்கூட்டராக Xoom 160 தனித்துவம் பெறுகிறது. வடிவமைப்பில் சாகசத்துக்கேற்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், LED லைட்டிங், ரிமோட் கி இக்னிஷன், ஸ்மார்ட் கி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் போன்ற நவீன வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன.
இது நேரடி போட்டியாளரில்லாமல் இருக்கும் நிலையில், ஹீரோ Xm 160 மாடல், யமஹா ஏரோக்ஸ் 155 உடன் சந்தையில் போட்டியிடும் என கூறப்படுகிறது.
English Summary
Hero MotoCorp launches new Xoom 160 model with various features