தங்கம் விலை சரிவு – டோனை மாற்றிய ஆனந்த் சீனிவாசன்! “இப்போ வாங்க வேண்டாம்” காரணத்தை சொன்ன ஆனந்த் சீனிவாசன்!
Gold prices fall Anand Srinivasan changes tone Anand Srinivasan gives reason for Donot buy now
கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்றத்தில் இருந்த நிலையில், தற்போது அதில் சரிவு காணப்படுகிறது. இதனால் தங்கம் விலை வரும் நாட்களில் எப்படி இருக்கும், இப்போது வாங்கலாமா என்ற குழப்பம் மக்களிடையே நிலவுகிறது. இதுகுறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் சேனலில் விரிவாக விளக்கமளித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, “தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லை, இப்போது நிலையாக உள்ளது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் குறைப்பு குறித்து உறுதி அளிக்காததால் தங்கம் விலை அப்படியே நின்றுவிட்டது. வெள்ளி (Silver) இன்னும் குறைவாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், சர்வதேச தங்க கவுன்சில் தகவல்படி தங்கத்தின் டிமாண்ட் 3% உயர்ந்துள்ளது. பல நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கத் தொடங்கியுள்ளதால் விலை பெரிய அளவில் குறையாது,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “அடுத்த ஆண்டு அமெரிக்காவில் பொருளாதார பற்றாக்குறை அதிகரிக்கும். அதனால் வட்டி விகிதம் குறையும். இதனால் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்பும் உள்ளது. ஆனால் தற்போது விலை மிக அதிக ஏற்றத்தாழ்வை சந்திக்கிறது. எனவே, தங்கத்தை வாங்க வேண்டுமென்றால் திருமணம் அல்லது முக்கிய நிகழ்வு இருந்தால் மட்டுமே வாங்குங்கள். இல்லையெனில் காத்திருந்து பாருங்கள்,” என வலியுறுத்தினார்.
அவர் மேலும், “வெள்ளியில் முதலீடு செய்வது தற்போது ஆபத்தானது. RBI வெள்ளிக்கு கடன் கொடுக்கலாம் என கூறியிருப்பது குறித்து கவனமாக அணுக வேண்டும்,” என்றும் கூறினார்.
மொத்தத்தில் ஆனந்த் சீனிவாசனின் கருத்து — தங்கம் விலை தற்போது மாற்றமில்லாமல் நிலையாக உள்ளது, பெரிய சரிவு இல்லை, ஆனால் முதலீட்டுக்காக இப்போ தங்கம் வாங்க வேண்டாம்; திருமணம் போன்ற தேவைக்காக மட்டும் வாங்கலாம் என்பதே.
குறிப்பு: இது ஒரு செய்தி மட்டுமே. இதை முதலீட்டு ஆலோசனையாகக் கருதக்கூடாது. எந்த முதலீட்டு முடிவையும் எடுக்கும் முன், உங்கள் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
English Summary
Gold prices fall Anand Srinivasan changes tone Anand Srinivasan gives reason for Donot buy now