உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் எதிரொலி.. ரஷ்யாவில் ஆப்பிள் நிறுவனம் பொருட்கள் விற்பனை நிறுத்தம்.!! - Seithipunal
Seithipunal


நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா கடந்த ஒரு வாரமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டு மழை பொழிந்தும், ஏவுகளைகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகிறது. 

ரஷ்ய படைகள் குறிப்பாக உக்ரேனின் தலைநகர் கீவாவை சின்னாபின்னமாகி வருகிறது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் உலகப் பேருக்கு வழிவகுக்குமோ என உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இருநாடுகளும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. 

இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாதது எடுத்து, உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவம் தாக்குதல் அதிகரித்து உள்ளது. 

இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைகளால் தாக்கி கோரத்தாண்டவம்; கீவ் நகரில் உள்ள தொலைக்காட்சி டவர் ஒன்று தகர்க்கப்பட்டதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு 'ஆப்பிள்' நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் ஆப்பிள் நிறுவன பொருட்கள் விற்பனை நிறுத்தி உள்ளது. ஆப்பிள் பே உள்ளிட்ட சேவைகளும் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. தங்கள் நாட்டு வான்வெளியில் இனி ரஷ்ய விமானங்கள் பறக்க கூடாது என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apple suspends sales of products in russia


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->