ஒரே நாள்... ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


பொதுவாக தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். ஏனென்றால் பெண்களுக்கு தங்கத்தின் மீது ஆசை இல்லை பேராசை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். 

இதுமட்டுமல்லாமல், கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்ட கொரோனாத் தொற்றின் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதனால், முதலீட்டாளர்களும் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5345 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 42760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் உயர்ந்து 5380 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 43040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி கிராம் ஒன்று 75.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 75000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

26 01 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->