ஆணுறைக்கு காலாவதி தேதி?..! கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது என்ன?..!! - Seithipunal
Seithipunal


ஆணுறை என்றும் காண்டம் என்று அழைக்கப்படும் பொருளானது தற்போதுள்ள நிலையில் அத்தியாவசியமான பயன்பாட்டு பொருளாக இருந்து வருகிறது. தவிர்க்க விரும்பும் கர்ப்பம் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய் தொற்றுகள் பரவாமல் பாதுகாத்து கொள்ளவும் ஆணுறை உதவுகிறது. 

ஆணுறை இவ்வாறாக நன்மையை செய்து வரும் நிலையில்., இதனை சரியான இடத்தில் வைத்து பாதுகாக்கத்த பட்சத்தில் பயனளிக்கும் வாய்ப்புகள் உள்ளது. பெரும்பாலானோருக்கு ஆணுறைக்கும் இருக்கும் காலாவதி தேதி குறித்து தெரிய வாய்ப்பில்லை. 

ஆணுறை பயன்படுத்தும் தம்பதிகள் கட்டாயம் கவனிக்க வேண்டியதாக., ஆணுறையை உபயோகம் செய்யும் சமயத்தில் நெகிழும் தன்மை குறைவாக உள்ளதா? அல்லது வறண்டு இருக்கிறதா? கைகளில் ஒட்டிக்கொள்ளும் தன்மையோடு இருக்கிறதா? என்பதை சோதனை செய்ய வேண்டும். 

 illegal affair, couple enjoy, affair, husband wife enjoy, தாம்பத்தியம், கள்ளக்காதல், உடலுறவு, கணவன் மனைவி தாம்பத்தியம்,

இவ்வாறான அறிகுறியுடன் ஆணுறைகள் இருக்கும் பட்சத்தில்., கட்டாயம் புதிய ஆணுறை வாங்குவது அல்லது உபயோகம் செய்வது நல்லது. மேலும்., ஆணுறையின் நிறம் வெளிறி பூஞ்சை தன்மையோடு மனம் இருக்கும் பட்சத்தில்., அது போன்ற ஆணுறையையும் உபயோகம் செய்வது நல்லதல்ல. 

ஆணுறையை வாங்கி வைத்துகொள்ளும் நபர்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். இல்லையேல் ஆணுறையில் கண்ணிற்கு தெரியாத கீறல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது அல்லது வறண்டு போகும் வாய்ப்புள்ளது. குளிராக இருக்கும் ஈரமில்லாத இடத்தில் ஆணுறையை வைத்து பாதுகாப்பது நல்லது. 

காண்டம், condom, condom images,

பொதுவாக ஆணுறையை உபயோகம் செய்யும் முன்னதாக காலாவதி தேதியினை கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் காலாவதி தேதி நெருங்கும் சமயத்தில் ஆணுறையின் மீட்சித்தன்மையை பாதிப்படையலாம். 

காணுவதற்கு நன்றாக இருந்தாலும் உபயோகம் செய்யும் நேரத்தில் கிழிந்துபோகும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆணுறையை இப்படி பாதுகாத்து வாங்கிவிட்டு., தாம்பத்தியத்தின் போது பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் க்ரீம் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

using condom memorize expiry date and elasticity


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->