800 கோடியை கடந்த உலக மக்கள் தொகை.! அடுத்த ஆண்டு சீனாவை முந்துமா இந்தியா.? - Seithipunal
Seithipunal


உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு உலக மக்கள் தொகை நாளன்று ஐ.நா. நவம்பர் 15-ந் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும் என்று கணித்திருந்தது. 

இதன்படி இன்று உலக மக்கள் தொகை 800 கோடியை கடந்து விட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும் ஐ.நா. சபை கணிப்பின் படி அடுத்த ஆண்டு சீனாவை முந்தி இந்தியா மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, 2080ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும் என்றும் ஐ.நா சபை கணித்துள்ளது. 1950 ஆம் ஆண்டு 200 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை 1974 ஆம் ஆண்டு 400 கோடியாக அதிகரித்தது. 

இதையடுத்து 48 ஆண்டுகளில் மக்கள் தொகை 800 கோடியாக உயர்ந்துள்ளது. உலக மக்கள் தொகை அதிகரித்தாலும், சமீப ஆண்டுகளாக கருவுறுதலில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக 2050 ஆம் ஆண்டு மக்கள்தொகை 0.5 சதவீதமாக வீழ்ச்சியடையக்கூடும் என்றும், 2050ஆம் ஆண்டு பூமியின் மக்கள்தொகை 900 கோடியாகவும், 2080 ஆம் ஆண்டு மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும் என்று ஐநா கணித்துள்ளது.

மேலும் 2050ஆம் ஆண்டிற்கு அடுத்த 100 கோடி மக்கள் தொகை காங்கோ, எகிப்து, எத்தியோபியா, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய நாடுகளில் 8 நாடுகளில் இருந்துதான் வரும் என்றும் ஐநா தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா மக்கள் தொகை நிதியத்தின் தலைவர் நடாலியா, 800 கோடி மக்கள் தொகை என்பது மனித குலத்துக்கு ஒரு முக்கியமான மைல் கல்லாகும். மக்கள் தொகை அதிகரிப்பை பொறுத்தவரை இது ஆயுட்காலம் அதிகரிப்பதையும், தாய் மற்றும் குழந்தை இறப்புகள் குறைவாக இருப்பதையும் குறிக்கிறது.

ஆனால் இந்த மக்கள் தொகை அதிகரிப்பினால் கொண்டாட்டங்களை விட அதிக கவலைகளை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Human Population reached 800 crores


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->