இலங்கையில் தொடரும் பதற்றம்..! வெடித்த இருசக்கர வாகனம்.!! அலறி ஓடிய மக்கள்.!! - Seithipunal
Seithipunal


ஈஸ்டர் பண்டியையை ஒட்டி இலங்கையின் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டலை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டுவெடிப்பில் 10 இந்தியர்கள் உள்பட 359-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத், இந்த தாக்குதலை வெளிநாட்டு அமைப்பின் உதவியுடன் நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஊடகமான அமாக் (AMAQ) வெளியிட்டுள்ள செய்தியை குறிப்பிட்டு ராய்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு அருகே பூட்டிய வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு உள்ளதா என போலீசார் சோதனை செய்தனர். இருசக்கர வாகன பெட்டியை திறக்க முடியாததால் போலீசார் சிறிய ரக வெடியை வைத்து வெடிக்க செய்தனர். இதனால் இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு இல்லாதது உறுதியானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today sri lanka blasts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->