தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் உயிரிழந்தனர்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் உள்நாட்டு படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறி வருகின்றன.
 
அங்கு சமீப காலமாக அங்கு தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தாத நாளே கிடையாது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்தநாட்டில் உள்ள பராக் மாகாணத்தின் தலைநகரான பராக் நகரில் தெக்யாக் பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தலீபான் தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராததால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிலை குலைந்து போயினர். அவர்களால் சுதாரித்து எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் போய் விட்டது.

இந்த தாக்குதலில் காவல்துறையினர் 7 பேர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். தலீபான் தீவிரவாதிகள் அங்கு இருந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் அள்ளிச்சென்று விட்டனர்.

இந்த தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என தலீபான் தீவிரவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், 7 போலீசாரை கொன்று அந்த சுங்கச்சாவடியை தாங்கள் கைப்பற்றி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

English Summary

terrorist attacked police

செய்திகள்Seithipunal