கலிபோர்னியாவில் கடும் பனிப்பொழிவு.! அடர்ந்த உறைபனியால் சாலைகள் மூடல்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தீவிர பனிப்புயலால் கலிபோர்னியாவின் தெற்கு பகுதிகளான காஸ்கேட்ஸ், சியரா நெவாடா, மத்திய கடற்கரை மற்றும் சான் பிரான்சிஸ்கோ பகுதிகளில் 1 முதல் 3 அங்குலம் வரை பனி அடர்ந்து காணப்பட்டது. அதிகபட்சமாக போர்ட்லேண்ட் பகுதியில் 10 அங்குலம் வரை பனி அடர்ந்து காணப்பட்டது.

மேலும் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் கடும் பனிப்புயலால் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தின் பெரும்பாலான சாலைகளில் அடர்ந்த உறைபனி காணப்படுவதால் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் கடும் பனிப்பொழிவால் 85,000 வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டும், கலிபோர்னியாவின் யோசெமிட்டி பூங்கா மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Roads closed as Heavy snowfall in California


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->