விமான கழிவறையில் காயங்களுடன் மீட்கப்பட்ட பயணி - நடுவானில் நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பாங்காக் நகரில் இருந்து லண்டன் நகர் நோக்கி தனியார் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, பயணி ஒருவர் கழிவறைக்கு சென்று, உட்புறமாக கதவை பூட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவேயில்லை.

இதனால் சந்தேகமடைந்த, ஊழியர் ஒருவர் கழிவறையின் கதவை திறந்து பார்த்தபோது, அந்த பயணி காயங்களுடன் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர், விமானத்தில் இருந்த மருத்துவருடன் சேர்ந்து, அந்த பயணிக்கு முதலுதவி செய்தனர்.

இதையடுத்து அவசர நடவடிக்கையாக, அந்த விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 17 நிமிடங்கள் முன்பாக லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் சென்று இறங்கியது. பின்னர் அந்த பயணி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால், விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

passenger injured flight toilet in mid air


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->