கலிபோர்னியாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு - 10,000 பேர் வெளியேற உத்தரவு - Seithipunal
Seithipunal


அமெரிக்கா கலிபோர்னியாவில் அடுத்தடுத்த புயலின் தாக்கத்தால் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகள் நிரம்பி நகரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மேலும் 25,000 க்கும் அதிகமானோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சாண்டா குரூஸ், வாட்சன்வில், சியரா நெவாடா பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால் சுமார் 10,000-க்கும் மேற்பட்டோரை உடனடியாக வெளியேறும்படி மாகாண நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கலிபோர்னியா முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, வெள்ளத்தினால் தணித்து விடப்பட்ட கிராமங்களிலிருந்து மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மத்திய கலிபோர்னியாவின் துலே நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் 1000-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ordered to 10000 people evacuate as heavy rain lashesout california


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->