குரங்கு அம்மை : கலிஃபோா்னியா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம்.! - Seithipunal
Seithipunal


குரங்கு அம்மை நோய் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் கடந்த மே மாதம் முதல் உலகம் முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் குரங்கு அம்மை பரவல் திடீரென அதிகரித்ததால் சான் ஃபிரான்சிஸ்கோ மற்றும் நியூயாா்க் மாகாணத்தில்  அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது கலிஃபோா்னியா மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலிஃபோா்னியா மாகாணத்தின் ஆளுநா் கெவின் நியூசம் தெரிவித்துள்ளதாவது,

கலிஃபோா்னியா மாகாணம் முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோய் தொற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கு வசதியாக அவசநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை நோய் தொற்றிற்கு எதிரான தடுப்பூசிகளை கூடுதலாக பெறுவது மற்றும் குரங்கு அம்மை தொற்று குறித்து விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதற்கு இந்த அவசரநிலை அறிவிப்பு உதவும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்". என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Monkey Measles State of Emergency declared in California


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->