பிரபல நாட்டில் ஆண் - பெண் ஒரே வாகனத்தில் செல்ல தடை.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா நாட்டில் உள்ள மாகாணம் ஒன்றில் ஆண், பெண் ஒரே வாகனத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு பகுதியில் இருக்கும் மாகாணம் ஆச்சே. உலக அளவில் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் நடைமுறையில் உள்ள பிராந்தியம் என்ற வகையில் ஆச்சே பிரபலமானது.

அதன்படி இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின் அடிப்படையில் ஆன ஆட்சியில் நடைபெறும் இந்த மாகாணத்தில் தண்டனையாக பொது இடத்தில் வைத்து கசையடிகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வினோத சட்டங்கள் அமலில் உள்ளன.

மேலும் சூதாட்டம் மது அருந்துவது திருமணத்திற்கு மீறிய உறவு போன்ற குற்றங்களுக்கும் இங்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது திருமணமாகாத மற்றும் குடும்ப உறவுகளில் வராத ஆண் பெண் ஆகியோர் ஒன்றாக வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மதப் பொருட்களின் பரிந்துரை அடிப்படையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆச்சே வாகனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆச்சே வாகனத்தின் ஒரு சில மாவட்டங்களில் நடைமுறையில் இருந்தா இந்த கட்டுப்பாடு தற்போது மாகாணம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Men and women not allowed in same vehicle


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->