அடுத்த பரபரப்பு.. "அமித் ஷா" மீது பாய்ந்த வழக்கு.! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கு பல மாநிலங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானாவில் நடைபெறும் மக்களவை பொது தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில் பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாகடந்த மே மாதம் ஒன்றாம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார வாகன பேரணியில் கலந்து கொண்டார். 

அமித் ஷா கலந்து கொண்ட இந்த வாகன பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் கடந்த மே 1ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார வாகன பேரணியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அவர் கலந்து கொண்ட வாகன பேரணையில் குழந்தைகளை பயன்படுத்தியதாக தெலுங்கானா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோன்று தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட கோவை வாகன பேரணியில் குழந்தைகள் கலந்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Case filed against Central minister Amit Shah


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->