கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனம் - ஜோ பைடன் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் கடந்த இரு மாதங்களாக குளிர்காலத்தினால் கலிபோர்னியா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் பனிப்புயல், சூறாவளி மற்றும் பலத்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நகர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேரோடு சாயந்துள்ளன.

மேலும் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதால் 2.2 லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக பகுதிகள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளன. இதுவரை புயல், நிலச்சரிவு, பனிப்பொழிவு மற்றும் பலத்த மழையால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு புயல்கள் தாக்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கலிபோர்னியா வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலிபோர்னியாவில் அவசரகால நிலையை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் பனிப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்டுப் பணிகளை துரிதப்படுத்தவும், பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Joe Biden declares emergency for California


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->