இலங்கைக்கு 23 ஆயிரம் கோடி கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


இலங்கைக்கு 23 ஆயிரம் கோடி கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், மக்கள் அத்தியாவாசியை பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அவசர கடனுதவியாக 5 பில்லியன் டாலர் வழங்குமாறு சர்வதேச நிதியத்திடம் இலங்கை அரசு கேட்டுக்கொண்டது.

இது தொடர்பாக சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்து அந்நாட்டு அரசு அதிகரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்ததையடுத்து, இலங்கைக்கு 23 ஆயிரம் கோடி கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMF approves 23 thousand crore loan to Sri Lanka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->