அமெரிக்கா : கலிபோர்னியாவில் வெளுத்துவாங்கிய மழை - மக்கள் அவதி.!  - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பனிபொழிவு இருந்து வருகிறது. இதனால் விபத்துகள் பல மடங்காகி உள்ளது. அந்தவகையில் கடந்த வாரம் அமெரிக்காவில் வீசிய கடுமையான பனிப்புயலால், நியூயார்க் உள்ளிட்ட பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பனிப்புயலுக்கு அறுபதுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இடைவிடாமல் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்துள்ளன.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, புத்தாண்டு கொண்டாட்டமும் களை இழந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் பெய்த இந்த மழையானது வரலாற்றில் இதுவரை இல்லாததைவிட அதிக அளவாகும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain in america californiya


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->