அது குழந்தையா? இல்லை பொம்மையா? சண்டை போட்டுக் கொண்டு குழந்தையை தூக்கி வீசிய பெண்கள் , பார்ப்பவர்களை ஆத்திரப்பட வைக்கும் அதிர்ச்சி வீடியோ.! - Seithipunal
Seithipunal


சவுதியில் நடுரோட்டில் பெண்கள் 5 பேர் பயங்கரமாக சண்டை போட்டுக்கொண்டு குழந்தையை கீழே தூக்கி வீசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சவுதி ரியாத்தில் இரு கார்கள் ஒன்றுக்கொன்று உரசி சிறு விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் காரில் சென்ற பெண்களுக்கிடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாக்குவாதம் அதிகரிக்கவே ஆத்திரமடைந்த பெண்கள் நடு ரோட்டில் இறங்கி ஒருவருக்கொருவர் பயங்கரமான கைகலப்பில் ஈடுபட்டனர்.

அவ்வாறு அவர்கள் ஒருவருக்கொருவரை அடித்து சண்டைபோட்டு கொண்டிருக்கும்போது  பெண் ஒருவர் தன் கையில் வைத்திருந்த குழந்தையை கீழே போட்டுவிட்டு அதனை கண்டுகொள்ளாமல் சண்டையில் .ஈடுபட்டுள்ளார்.

மேலும் அந்தகுழந்தையை  மீண்டும் மீண்டும் தூக்கி கீழே வீசி விட்டு அவர் சண்டையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இத்தகைய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 இது பார்ப்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 

English Summary

girls throw the baby while fighting

செய்திகள்Seithipunal