"உலகமே உதாசினப்படுத்தினாலும் தமிழர்களுக்காக நாங்கள் இருக்கிறோம்"... வேட்டி சட்டையில் வெளுத்துக்கட்டிய கனடா பிரதமர்..!! - Seithipunal
Seithipunal


தமிழ் மக்களுடன் கனடா நாட்டு தலைமை அமைச்சர் பொங்கல் விழா கொண்டாடியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 14 ஆம் தேதியன்று தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை தமிழர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடினர்.

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழர்களுக்கு வாழ்த்து கூறினார்.இங்கிலாந்து மற்றும் கனடா நாட்டு தலைமை அமைச்சர்களும் தமிழக மக்களுக்கு பொங்கல் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பொங்கல் தினத்தன்று கனேடிய தலைமை அமைச்சர், தமிழ் மக்களின் பாரம்பரியம் மற்றும் இந்த மதத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை கற்றுக்கொள்வதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பம் என பொங்கல் தினம் குறித்து கூறினார்.

இந்நிலையில் தமிழக மக்களுடன் இணைந்து, தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து கனடா நாட்டு பிரதமர் பொங்கல் விழாவை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடியுளார். அதன் புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இதனை தொடர்ந்து, கனடாவில் உள்ள தமிழ் மக்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது பொங்கல் வாழ்த்து உரையினை ஆற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘வணக்கம், இன்று கனடாவில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள், நான்கு நாள் நடக்கும் அறுவடை பண்டிகையின் தொடக்கமாக தைப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.

தை பொங்கல் அறுவடை பரிசுகளுக்கு நன்றி கூற வேண்டிய தருணம் இது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து, அமைதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டாட கிடைக்கும் ஒரு வாய்ப்பு பொங்கல் திருநாள்.

கனடா தமிழர்களின் வலுவான வேர்களை பிரதிபலிக்க ஜனவரியை நாங்கள் தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடுகிறோம்.

கனடாவில் உள்ள தமிழர்கள் நமது நாட்டிற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். மேலும் கனடாவை திறந்த மனதோடு, அனைவருக்குமான வலுவான நாடாக மாற்ற கனடா மக்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள்.

இந்த 2018யில் நாம் இணைந்து முன்னோக்கிச் செல்லும்போது நம்மை ஒன்றிணைக்கும் மதிப்புமிக்க விடயங்களை தொடர்ந்து கொண்டாடி, கனடாவை சிறந்த மற்றும் அனைவருக்கும் இணக்கமான நாடாக உருவாக்க தினமும் உழைப்போம்.

எனது குடும்பம் சார்பாக நானும், சோஃபியும் தைப் பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் இனிய தமிழ் பாரம்பரிய மாத வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறோம். இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

canada pm makes proud to tamilians


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->