நாங்க எப்போதும் இந்தியாவோடு கைகோர்த்து இருப்போம் : பாகிஸ்தான், சீனாவிற்கு பீதியை ஏற்படுத்திய வங்க தேசம்.., - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் சர்வதேச அறிவியல் விழா நடைபெற்று வருகிறது.

5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை நேற்று மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில், வங்க தேச தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஈஃபிஸ் ஓஸ்மர், ஆப்கானிஸ்தான் அமைச்சர் அப்துல் லதிஃப் ரோஷன், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய வங்க தேச அமைச்சர் ஓஸ்மர், 1971-ம் ஆண்டு தங்கள் நாடு உருவாவதற்கு காரணமாக இருந்ததே இந்தியா தான் என்று கூறினார்.

மேலும், இந்தியாவோடு கைகோர்த்து செயல்படுவோம் என்றும், அதன் மூலம் அறிவியல் வளர்ச்சியில் மேன்மேலும் உயர விரும்புகிறோம் என்றும் கூறினார்.

கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்க தேசத்தை தனி நாடாக பிரிக்க இந்தியா காரணமாக இருந்தது. 

மேலும், ஏற்கனவே இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சினை இருக்கும் போது வங்க தேசத்தின் இந்த அறிவிப்பு இவ்விரு நாடுகளும் பீதியில் உரைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bangladesh wants together with india for devolop their science and technology


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->