ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த ஆஸ்திரேலிய நிறுவனம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த ஆஸ்திரேலிய நிறுவனம் - நடந்தது என்ன?

பிரபல சமூக வலைதள நிறுவனமான டுவிட்டருக்கு எதிராக ஆஸ்திரேலிய திட்ட மேலாண்மை நிறுவனமான ஃபெசிலிடேட் கார்ப் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தி்ல் வழக்கு பதிவு செய்துள்ளது. 

எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக தளத்தை வாங்கியதிலிருந்து, அதற்கு எதிராக "பில்கள் மற்றும் வாடகையை செலுத்தவில்லை" என்று தொடரப்பட்டு வரும் வழக்குகளில், இந்த ஆஸ்திரேலிய நிறுவனத்தின் வழக்கும் ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் ஃபெசிலிடேட் கார்ப் நிறுவனம், "கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டு முற்பகுதி வரை, லண்டன் மற்றும் டப்ளினில் உள்ள டுவிட்டரின் அலுவலகங்களில், சென்சார்களை நிறுவி, சிங்கப்பூரில் அலுவலகப் பணிகள் முடித்து, சிட்னியில் உள்ள அலுவலகம் பணிபுரிதலுக்கு ஏற்ற வகையில் அமைத்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. 

இந்த மூன்று பணிகளுக்காக டுவிட்டர் நிறுவனம், சுமார் ரூ.2 கோடியே 10 லட்சம், சுமார் ரூ. 3 கோடி 31 லட்சம் மற்றும் சுமார் ரூ. 33 லட்சம் தர வேண்டும் என்று ஃபெசிலிடேட் தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கான வழக்கு விசாரணையின் போது நிர்ணயிக்கப்படும் தொகை, வழக்கு செலவுகள், வட்டி ஆகியவற்றோடு இழப்பீட்டுத் தொகையை கோர இருப்பதாக ஃபெசிலிடேட் தெரிவித்துள்ளது. 

கடந்த மே மாதம், ஒரு முன்னாள் மக்கள் தொடர்பு நிறுவனம், ட்விட்டர் நிறுவனம் தனது பில்களை செலுத்தவில்லை என்று நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதேபோல், அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான இன்னிஸ்ஃப்ரீ எம்&ஏ என்ற நிறுவனம் சுமார் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டும், பிரிட்டன்ஸ் கிரவுன் எஸ்டேட் எனும் நிறுவனம் வாடகை பாக்கி நிலுவைக்காகவும் டுவிட்டரின் மீது வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

austrelia company case file to twitter company


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->