வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு - 8 வயது சிறுவன் உட்பட 5 பேர் பலி - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டிற்கு எதிரான கடுமையான சட்டங்கள் இயற்றிய போதிலும், நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அப்பாவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கிளீவ்லேண்ட் என்ற சிறிய நகரத்தில் 39 வயதான நபர் தனது வீட்டில் நின்று கொண்டு துப்பாக்கியால் வானத்தை சுட்டுக் கொண்டிருந்தார்.

இதனால் அண்டை வீட்டில் இருந்தவர்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து அண்டை வீட்டில் இருந்தவர்கள் துப்பாக்கி சூட்டை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டதற்கு, என் வீடு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறி மறுத்துவிட்டார். இதன் பின்பு சிறிது நேரம் கழித்து அண்டை வீட்டிற்குள் நுழைந்த அந்த நபர் துப்பாக்கியால் வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக சுட்டுத்தள்ளிவிட்டு தப்பியோடியுள்ளார்.

இந்த கோர சம்பவத்தில் 3 பெண்கள், 8 வயது சிறுவன் உட்பட வீட்டிலிருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நகர காவல்துறையினர் கூறும்பொழுது, துப்பாக்கியால் சுட்ட நபர் மெக்சிகன் நாட்டைச் சேர்ந்த ஓரோபெஸ் என்றும், அந்நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 died as shooting into house in Texas province America


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->