கடந்த 24 மணிநேரத்தில் 240 நிலநடுக்கங்கள் - தைவானில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


தைவான் நாட்டின் கிழக்கு கடலோர பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 240 நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. இதில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. 

இந்தத் தகவலை அந்நாட்டிலுள்ள மத்திய வானிலை ஆய்வு நிர்வாகத்தின் நிலநடுக்க அறிவியல் மைய இயக்குநர் வூ சீன்-வு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஹுவாலியன் கவுன்டி பகுதியில் நேற்று மாலை 3.08 மணி முதல் இன்று மதியம் 1.30 மணி வரையில் மொத்தம் 247 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 

இதேபோன்று, கடந்த 3-ந்தேதியில் இருந்து இதுவரை பதிவான நிலநடுக்கங்களின் எண்ணிக்கை 1,095 ஆக உள்ளது. தைவானின் கடலோர பகுதியில் கடந்த 3-ந்தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவே ஆகும். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 821 பேர் படுகாயமடைந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

240 earthquake in taiwan country


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->