கலிபோர்னியாவில் ஹாலோவீன் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி - Seithipunal
Seithipunal


அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிறிஸ்தவ புனிதர்களை நினைவுகூறும் ஹாலோவீன் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் அலறி அடித்தபடி அனைத்து திசைகளிலும் ஓடினர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed in halloween party in California


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->