கலிபோர்னியாவில் கனமழையால் வெள்ளம் - 17 பேர் பலி - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததில் மாகாணத்தின் முக்கிய சாலைகள் மூடப்பட்டது.

இந்நிலையில் நேற்று விசாலியாவிற்கு அருகிலுள்ள சான் ஜோக்வின் நெடுஞ்சாலை மரம் முறிந்து விழுந்ததில், டிரக் டிரைவர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்தனர் என்று கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் சான் மிகுவல் அருகே ஐந்து வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சிறுவனை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக வருகின்றனர். இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக மாகாணம் முழுவதும் சுமார் 34,000 பேர் வெளியேற்றபட்டுள்ளாதாக லிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் தெரிவித்துள்ளார். மேலும் பலர் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 killed in floods in California due to heavy rains


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->