சட்டம் ஒழுங்கு சீரழிவு..காவல்துறை செயலிழந்துவிட்டது - மருத்துவர் ராமதாஸ் குற்றசாட்டு!! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலைக்கு பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிவுள்ளதாவது :-

நெல்லை மாவட்ட  காங்கிரஸ்  தலைவர் ஜெயக்குமார் படுகொலை சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு எடுத்துக்காட்டு: காவல்துறை  செயலிழந்து விட்டது பா.ம.க.  நிறுவனர்  மருத்துவர் இராமதாசு  கண்டனம்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங் , கடத்திச் சென்று  அவருக்கு சொந்தமான தோட்டத்தில்  எரித்து படுகொலை செய்யப்பட்டிருப்பது  அதிர்ச்சி அளிக்கிறது.  அவரை இழந்து வாடும்  குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் படுகொலைக்கு காவல்துறையின் அலட்சியம் தான் காரணம் ஆகும்.  தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த  ஏப்ரல் 30-ஆம் தேதியே  நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் எழுத்து மூலம் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.  ஒரு கட்சியின் மாவட்ட தலைவராக இருப்பவர் புகார் அளிக்கும் போது அதனடிப்படையில் அடுத்த நிமிடமே  காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.  ஆனால்,  அதை செய்ய காவல்துறை தவறி விட்டது.



ஜெயக்குமார் விவகாரத்தில் மட்டுமின்றி,  அனைத்து விவகாரங்களிலும்  இதே அலட்சியத்துடன் தான் காவல்துறை செயல்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்பதற்கு நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தான்  எடுத்துக் காட்டு ஆகும்.

ஜெயக்குமார் படுகொலைக்கு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் ஒருவித அச்சம் நிலவுகிறது. ஜெயக்குமார் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டறிந்து  சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதன்மூலம் மக்கள் மத்தியில் இழந்த நம்பிக்கையை காவல்துறை மீட்டெடுக்க வேண்டும்; மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று இவ்வாறு கூறிவுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deterioration of law and order police is dysfunctional Dr Ramadoss statement


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->