கலிபோர்னியாவில் பனிப்புயல்.! 1.20 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவிப்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் மிக மோசமான பனிப்புயல் காரணமாக டஜன் கணக்கானோர் உயிரிழந்தனர். இதில் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தீவிர பனிப்புயலால் கலிபோர்னியாவின் தெற்கு பகுதிகளான காஸ்கேட்ஸ், சியரா நெவாடா, மத்திய கடற்கரை மற்றும் சான் பிரான்சிஸ்கோ பகுதிகளில் சாலைகளில் பனி அடர்ந்து காணப்படுகிறது.

இதில் அதிகபட்சமாக போர்ட்லேண்ட் பகுதியில் 10 அங்குலம் வரை பனி அடர்ந்து காணப்பட்டது. மேலும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மணிக்கு 112 கிலோமீட்டர் பனிபுயல் வீசுவதால் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருளில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தின் பெரும்பாலான சாலைகளில் அடர்ந்த உறைபனி காணப்படுவதால் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலிபோர்னியா வாகனம் முழுவதும் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 lakhs 20 thousand people without electricity due to snow storm in California


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->