ட்விட்டருக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள “த்ரெட்ஸ்”- இதிலிருக்கும் அம்சங்கள் என்னென்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


ட்விட்டர் சமூக வலைதளத்திற்கு மாற்றாக மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் என்ற புதிய தளத்தை உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

ட்விட்டர் தளத்தில் எண்ணற்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது அதற்கு போட்டியாக த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட முதல் 4 மணி நேரத்தில் சுமார் 5 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளதாக மார்க் ஸூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் தளத்தை அடிப்படையாக வைத்து த்ரெட்ஸ் இயங்குகிறது. பயனர்களை கவரும் வகையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் ஏற்கனவே வெரிஃபை செய்யப்பட்ட பயனர்களுக்கு இதில் ப்ளூ டிக்கும் வழங்கப்படுகிறது. த்ரெட்ஸில் உள்ள பல அம்சங்கள் அப்படியே ட்விட்டரை போலவே உள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் பயனர்கள் நேரடியாக ஆப் ஸ்டோரில் இருந்து த்ரெட்ஸ் செயலியை டவுன்லோட் செய்யலாம். அதன் பின்னர் பயனர்கள் தங்கள் இன்ஸ்டா கணக்கு விவரங்கள் மூலமாக இதில் லாக்-இன் செய்துகொள்ளலாம். ஏற்கனவே மெட்டா நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என மூன்று சமூக வலைதளங்களை தன் வசம் வைத்துள்ளது.

இந்நிலையில் டெக்ஸ்டை அடிப்படையாகக் கொண்டு த்ரெட்ஸ் தளத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பதிவையும் 500 கேரக்டர்கள் என்ற எண்ணிக்கையில் பயனர்கள் பதிவிட முடியும்.

மேலும் இதில் லிங்க், போட்டோ மற்றும் 5 நிமிட வீடியோக்களையும் பதிவிடலாம். ஒரு பதிவுக்கு 10 போட்டோக்கள் பதிவிட முடியும்.  ட்விட்டரை போலவே இதிலும் பதிவை மீண்டும் Repost செய்யவும், Quote செய்யவும் முடியும். இப்போதைக்கு இதில் ஸ்டோரி  பகிர முடியாது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Threads has entered the field to compete with Twitter do you know what features it has


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->