வாகனங்களை நிறுத்தினாலே கட்டணம்.!அதிர்ச்சியில் தமிழக மக்கள்.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் ரயில்நிலையத்தில் வாகனங்களை உள்ளே வந்து நிறுத்தினாலே வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் அவலம் தற்போது ஏற்பட்டுள்ளது.கடந்த மாதம் 12 ம் தேதி முதல் பார்க்கிங் செய்ய இது போல் கட்டணம் மாற்றி வசூலிக்கபடுக்குறது.வாகனங்கள் உள்ளே வரும்போதே தடுத்து நிறுத்தி வசூல் வேட்டையில்  ஈடுபடுகின்றனர். அதன் படி முதல் 12  மணி நேரத்துக்கு இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய் 10 ம்,கார்களுக்கு ரூபாய் 20 ம் ,மினி வேன்களுக்கு ரூபாய் 50 ம் வசூலிக்கப்படுகிறது.

Image result for parking in villupuram railway station tamilnadu

இதே ரயில்வே வளாகத்திற்குள் மற்றொரு பார்க்கிங் இடத்தில முதல் 12  மணி நேரத்துக்கு  ரூபாய் 5 ம் ,24 மணிநேரத்துக்கு ரூபாய் 10 ம் வசூலிக்கப்படுகிறது. ஒரே ரயில்நிலையத்தில் இரு வேறு பார்க்கிங்கில் இரு வேறு கட்டணம் வசூலிப்பது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Image result for parking in railway station tamilnadu

பொதுமக்கள் இதைப்பற்றி கூறும் போது பார்க்கிங் செய்ய இருசக்கர வாகனங்களுக்கு 12 மணி நேரத்திற்கு 10 , 24 மணி நேரத்திற்கு 15 ரூபாய்  கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆனாலும் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் போதுமான அளவு மேற்கூரை வசதி எதுவும் இல்லை. கொளுத்தும் வெயிலிலேயே வாகனங்கள் நிறுத்த வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி கயிறு கட்டி எல்லை வகுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, “இது திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள் உத்தரவின் பேரில் தான் வாகனங்களுக்கு இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் எங்களால் ஏதும் செய்ய முடியாது” என தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

when we are stoping the vechile we have to pay


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->