CBI, EDக்கு நாடு முழுவதும் சோதனை செய்ய அதிகாரம் உண்டு.!! மத்திய அமைச்சர் வி.கே சிங் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு இந்தியா முழுவதும் சோதனை செய்ய அதிகாரம் உண்டு என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே சிங் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மித்திரங்குடியில் பிரதமர் கிராம சாலைகள் திட்டம் மூலம் அமைக்கப்படும் சாலைப் பணியை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியின் நிறைவாக வி.கே சிங் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ''கடந்த 68 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்து காட்டியுள்ளார். சிபிஐ, அமலாக்கத் துறைக்கு நாடு முழுவதும் சோதனை செய்ய அதிகாரமும், சட்டமும் உள்ளது.

இந்த அமைப்புகளின் விசாரணையில் யாரும் குறுக்கிட முடியாது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் அவர் கட்டாயம் தலையிடுவார்" என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VK Singh said CBI ED have power to conduct nationwide search


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->